Aug 30, 2006

சங்கம்- கவிதைப் போட்டி(1)-கவிதை- 20

விண்ணிருந்து நட்சத்திரமொன்று உதிர்ந்த கணத்தில்
கண் மூடி நானுன்னை யாசித்தேன்

மேகமிடித்து மழை பொழிந்த தினத்தில்
மின்னல் வெட்ட, உன்னை நான் சந்தித்தேன்

மெரீனா... ஒண்ணு வாங்குங்க"
என் வாழ்வின் பௌர்ணமி அன்றுதான்

கடலலை கால் தொட கதையளக்கையில்
என் வானெங்கும் நீந்திக் கொண்டிருந்தன
அன்னப் பட்சிகள்

"என்னைப் பிடிச்சிருக்கா" நீ கேட்ட விநாடி
வானவில்லொன்று வெடித்துச் சிதறி
விண்ணெங்கும் ரங்கோலி!

தயங்கியவாறே நானுன்னை தீண்ட
முத்தமிட்டுக் கொண்டிருந்தன
வானும் கடலும், தூரத்தில்

"அருந்ததி தெரியறதா பாருங்கோ"
உன் விரலழுத்தி சிரித்தேன், சிரித்தோம்
இன்னும் இருக்கிறது ஆகாயம்
நமக்கான தேனிலவை சுமந்துகொண்டு!

#போட்டியாளர் சார்பில் பதிவிட்டது : நாமக்கல் சிபி

1 ஊக்கங்கள்:

said...

இந்து திருமண முறையை அழகாக எடுத்துக்காட்டுகிறது தங்கள் கவிதை வெற்றி பெற வாழ்த்துக்கள்!