Jul 6, 2007

சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் உறுதி மொழி பாரீர்

  • புலம்பெயர்ந்தாலும் தடம் புரளாமல் தவறாது தமிழ் மொழி இனம் பண்பாடு காத்திடலின் அவசியத்தை சிகாகோ பெருநகரிலும் நிலைநாட்டல் வேண்டி ஆவன செய்யும்

  • இன்றமைந்தது இன்றே தீர்ந்தது வென நில்லாது நாளை என்ற சமுதாயம் தமிழ்ச்சமுதாயம் தமிழோடு வாழ வழிவகுக்கும் வகை காண ஆவன செய்யும்

  • அறிவுசார்புடைய வளமான விழிப்பான வழிகாட்டியென உலகெலாம் வாழ் தமிழினம் வாழ்ந்திட இடுக்கண் களைந்து தமிழுறவு வளர்ந்திட ஆவன செய்யும்

நன்றி-சிகாகோ தமிழ்ச் சங்கம்

Jul 2, 2007

தமிழிசை

இயல், இசை, நாடகம் என்று முத்தமிழை பகுப்படுத்தி, இசை தமிழர் வாழ்வியியலில் ஒரு முக்கிய அம்சமாக தொன்றுதொட்டு இருந்துவருகின்றது. தமிழ்ச் சூழலில் இசை நுணுக்கமாக ஆயப்பட்டு தொடர்ச்சியாக மேம்படுத்தப்பட்டு தமிழிசையாக செம்மை பெற்றது.
தமிழிசை மிகப் பழமையானது. தொல்காப்பியர் இயற்றிய 'தொல்காப்பியம்' என்னும் நூலில் இசையைப் பற்றிய ஆழ்ந்த கருத்துக்களை தெளிவாகக் காணலாம். சாத்தனாரின் கூத்த நூலிலும் தமிழரிசை பற்றி அதிகமாக, விரிவாக கூறப்பட்டுள்ளது.

தமிழர், இசையிலும், இயலிலும், நாடகயியலிலும் மேம்பட்டு விளங்கி வந்தனர். ஆனால் பல ஆண்டுகள் பிற மொழி பேசும் அன்னியர் ஆட்சியில் வாழ்ந்ததால் தமிழும், தமிழிசையும் உருமாற்றத்திற்கு ஆளாயின.
வடமொழியான சமஸ்கிருதச் சொற்களின் திணிப்பு பெருகியது. இயல்தமிழ்ச்சுவடிகள் அனல் வாதத்திலும், புனல் வாதத்திலும் பலி கொள்ளப்பட்டன. சிற்றிசை, பேரிசை, இசைநூல், இசைநுணுக்கம், பஞ்சமரபு, தாளசமுத்திரம், ஆளத்தி அமைப்பு போன்ற எத்தனையோ இசைநூல்களும், கூத்துவரி, உளநூல், சயந்தம், செயிற்றியம் விளக்கத்தார் கூத்து, நாட்டியவிளக்கம் ஆகிய நாடக நூல்களும் அழிந்து போயின. அக்கால நாடகவியல் நூல்கள் பெரும்பாலும் தமிழிசைச் செவ்விகளை முதன்மையாகக் கொண்டவை.

தமிழர் வாழ்வில் பாட்டு

"தமிழர்கள் வாழ்க்கையில் தாயின் வயிற்றில் கருக்கொண்டதுமே நலுங்குப் பாடல், மண்ணில் உதித்ததுமே குழந்தைக்குத் தாலாட்டுப்பாடல், சிறுவர்களுக்குத் நிலாப்பாடல், (பாரதியின் பாப்பா பாடல்), இளைய வயதில் வீரப்பாடல் மற்றும் காதல் பாடல், திருமணத்தில் திருமணப்பாட்டு, உயிர் துறந்தபின் ஒப்பாரிப்பாட்டு என மனித வாழ்க்கையின் அனைத்துப் பருவங்களிலும் தமிழ்ப்பாடல்கள் உள்ளன."

தமிழிசை வாணர்கள்

  • அருணகிரிநாதர்
  • முத்துத் தாண்டவர்
  • மாரிமுத்தாப்பிள்ளை
  • அருணாச்சல கவிராயர்
  • ஊத்துக்காட்டு வேங்கட சுப்பையர்
  • கோபால கிருஷ்ண பாரதியார்
  • இராமசாமி சிவன்
  • இராமலிங்க அடிகளார்
  • கவிகுஞ்சாபாரதி
  • வேதநாயகம் பிள்ளை
  • திரிகூடராசப்ப கவிராயர்
  • மாம்பழக் கவிச்சிங்க நாவலர்
  • பாரதி பாரதிதாசன்
  • மாரியப்ப சுவாமிகள்
  • சிதம்பரம் ஜெயராமன்
  • திருவாரூர் நமச்சிவாயம்
  • தண்டபாணி தேசிகர்
  • கே.பி. சுந்தராம்பாள்
  • தியாகராஜ பாகவதர்.

நன்றி: விக்கிபீடியா