Nov 9, 2006

இன்னும் இருக்கிறது ஆகாயம்-முடிவுகள்


இந்தத் தலைப்புக்கு வந்த கவிதைகள் பல. அதில் சிலர் பதிவுகள்(பிலாகர்) அல்லாதவர்கள். அவை கொடுத்த உற்சாகம் தான் எங்களுக்கு பெரிய ஊட்டமே. இருப்பினும் முடிவுகள் அறிவிக்க காலதாமதம் ஆனதற்கு பல காரணங்கள் உண்டு. அதில் ஒன்று கணினிமயமாக்கல் இல்லாததுதான்.
போட்டியில் கலந்துகொண்டு சிறப்பளித்த அனைவருக்கு நன்றி! நன்றி! நன்றி!
இப்படி ஒரு போட்டியை நடத்த எங்களுக்கு அறிவுரை வழங்கிய தடாலடியாருக்கும், ஊக்கமும் முடிவுகளில் உதவிய தேனி கண்ணனுக்கும் நன்றி!
முதல் கட்ட தீர்ப்புகளை வழங்கிய "இன்ஜினியர்" பாலபாரதிக்கும்(ஒவ்வொரு கவிதைக்கும் ஒரு விமர்சனம் தந்தவருக்கு சங்கம் சிரம் தாழ்த்தி நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கிறது. நாளை அந்த விமர்சனங்களை ஒரு பதிவாகவே வெளியிடுகிறோம்), முத்துக்கள் மாதிரி ஒவ்வொரு கவிதைக்கும் ஒரு மதிப்பெண் அளித்து தரம் பிரித்து தந்த "நிலவு நண்பன்" ரசிகவ் ஞானி, அவர்களுக்கும் நன்றி! நன்றி!



தாமாகவே முன் வந்து எங்களுக்கு உதவிய முத்தமிழாருக்கும்(மஞ்சூர் ராஜா) ராசுக்குட்டிக்கும் எங்கள் நன்றிகள் பல.


வெற்றியாளர்களின் பெயர்களை வெளியிட சங்கம் தனி மடலை எதிர்பார்ர்க்கிறது- தனி மடல் முகவரி sirippu.sangam@gmail.com

இதோ முடிவுகள்


ஆறுதல்: கவிதை- 21
கவிதையைப் படிக்க சொடுக்கவும்


மூன்றாவது இடம்: கவிதை - 23
கவிதையைப் படிக்க சொடுக்கவும்


இரண்டாவது இடம்: கவிதை - 05
கவிதையைப் படிக்க சொடுக்கவும்


முதல் இடம்: கவிதை - 03
கவிதையைப் படிக்க சொடுக்கவும்

7 ஊக்கங்கள்:

said...

இளா,
பரிசு வாங்கனவங்க பேரையும் சொல்லிருக்கலாம் இல்ல?

said...

//வெற்றியாளர்களின் பெயர்களை வெளியிட சங்கம் தனி மடலை எதிர்பார்ர்க்கிறது//
கவிதைகளை அனுப்பும் போதே சிலர் பெயர்களை வெளியிடக்கூடாது என்று அறிவுறுத்தலே இதற்கு காரணம். நாளை அனைவரின் பெயரும் வெளியிடப்படும்.

said...

வெற்றிப் பெற்ற நம் நண்பர்க்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

said...

இளா நல்ல முயற்சி
நல்ல போட்டி
நல்ல தேர்வு

போட்டி நடத்தியவர்களுக்கும், பங்கு பெற்றவர்களுக்கும், வெற்றி பெற்றவர்களுக்கும் நன்றியும், பாராட்டுகளும்

தொடரட்டும் உங்கள் பணி
வாழ்த்துகள்

said...

வெற்றி அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

said...

அனைத்தும் அருமையான தேர்வுகள்...வெற்றிப் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

பங்கு கொண்ட நண்பர்களுக்கும் சிறப்பு வாழ்த்துக்கள்...

நல்லதொரு பணியினை செய்திட்ட குழு நண்பர்களுக்கு சிறப்பு வாழ்த்துக்கள்...இன்னும் தொடருங்கள்...

said...

இளா!

நல்ல முயற்ச்சி!
பங்குபெற்றவ்ர்களுக்கும்,
நடத்திய தமிழ் சங்கத்தினருக்கும்,
மதிப்பெண் வழங்கிய மதிப்பிற்க்குரிய வலைப்பூ நண்பர்களுக்கும்,
வெற்றி பெற்ற அனைத்து நண்பர்களுக்கும்

"வாழ்த்துக்கள்!!!"


அன்புடன்...
சரவணன்.