அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
'எழுத்துக்களுக்கெல்லாம் 'அ' முதலானதாயிருப்பதுபோல உலகுக்கு இறைவன் முதல்வனாக இருக்கிறான்.'
மனிதக் குரங்குகள் குரங்கு மனிதர்களாய் வாழ்ந்த காலமது.
மலைஅடிவாரத்தில், குகைகளுக்குள், மிருகத்தோலாடைகளுடன் வாழ்ந்துவந்தனர் அவர்கள். சைகையும் ஒலிகளும் நிறைந்த மொழி ஒன்றைப் பேசினர். இயற்கைக்கு அஞ்சி நடுங்கினர். குழுவாக வேட்டையாடி கிடைப்பதை ஒன்றாய் பகிர்ந்தனர்.
வயதானப் பெண் ஒருத்தி ஒருநாள் இந்தக் கூட்டத்தைவிட்டுப் பிரிந்தாள். நெடுந்தூரம் நடந்தாள். மலையின் உச்சியை அடைந்து இயற்கையை கவனிக்கத் துவங்கினாள்.
வானின் நட்சத்திரங்களைக் கணக்கெடுத்தாள். பூமியின் சுழற்சியை கண்டுகொண்டாள். செடிகொடி வளர்ப்பதை தெரிந்துகொண்டாள். தீயை உருவாக்கி கட்டுக்குள் வைத்திருக்கப் பழகினாள். கோள்களின் பாதையைப் புரிந்துகொண்டாள். காட்டில் விளைபவைகளில் விஷத்தையும் உணவையும் பிரித்தறியும் அபூர்வ உணர்வு அவளுக்கிருந்தது. பல ஆண்டுகள் கழித்து இயற்கைபற்றிய பயம் நீங்கியவளாய் மலையிலிருந்து கீழிறங்கினாள்.
தொலைந்துபோனவள் திரும்ப வருவதை வேடிக்கையாய் பார்த்தனர் கீழிருந்தவர்கள். அவளிடம் ஏதோ மாற்றம் தெரிந்தது. அவள் முகம் ஒளியில் மிதப்பதைப் போலொரு பிரம்மை மேற்கொண்டது.
மக்களைப் பார்த்ததும் கைகால்களை அசைத்து ஒருவகை நாட்டியமாடினாள் இவள். இதுவரை அவர்கள் அறிந்திராதது அந்த நாட்டியம்.
"உண்மைகளை அறிந்துகொண்டேன்" என்றாள்.
"சொல்" என்றனர், சிலர் ஏளனத்துடனே.
"சொல்லொண்ணா பேரின்பம்." என்றாள்.
"பைத்தியக்காரி." என்றனர்.
"ஆமாம். அசாதாரணச் சிந்தனை கொண்டவர்கள் பைத்தியங்கள்தான்." என்றாள்.
"அவளை விடுங்கள்." பெரியவர் ஒருவர் முன்வந்தார்."உனக்கு ஏதோ தெரிந்திருக்கிறது. சொல் அதை எங்களுக்கும்."
"இயற்கை." என்றாள்
"விளக்கு." என்றார்.
அவளுக்குப் புரிந்ததைச் சொன்னாள். புரியாமல் விழித்தனர் மக்கள்.
"புரியச்செய்". என்றனர்.
கதைகளாகச் சொன்னாள் அவள் கண்டவைகளை.
"எப்படி நம்புவோம் உன்னை?" என்றனர்.
"நாளை பகலில் இரவு தோன்றும் பாருங்கள்." என்றாள்.
கேலி செய்தனர் அவளை. கல்லால் எறிந்து கொல்வோம் என்றனர். நாளைவரை பொறுத்திருக்கச் சொன்னார் பெரியவர்.
அந்த சூரியக் கிரகண நாளுக்குப்பின் உலகின் முதல் மதம் தோன்றியது.
Jan 25, 2007
அகர முதல எழுத்தெல்லாம்
செதுக்கியவர் சிறில் அலெக்ஸ் at Thursday, January 25, 2007
Labels: அறத்துப்பால், கடவுள் வாழ்த்து, பாயிரம்
Subscribe to:
Post Comments (Atom)
41 ஊக்கங்கள்:
எப்டிங்க இதல்லாம்!அல்லாம் சும்மா அப்டியே வர்றது இல்ல! (மை.ம.காமராஜன் தீவண்டி கமல் குரலில் வாசிக்கவும்)
நன்றி ஜோ.
குற்ள்களை கதைகளோடு பதிக்கும் இந்த முயற்சிக்கு மேலும் ஆதரவு தாருங்கள் தாருங்கள் என உங்கள் திருப்பாதங்களை வணங்கி கேட்டுக்கொள்கிறோம்.
(தேர்தல் பிரச்சார பாணியில் வாசிக்கவும்)
:)
தமிழ்ச் சங்கத்தில் அன்று திருக்குறளை அரங்கேற்றும் பொறுப்பு வள்ளுவனுக்குக் கிடைத்தது. இன்று சிறிலுக்குக் கிடைத்திருக்கிறது. மிகச் சிறப்பு.
கடவுள் வாழ்த்தில் துவங்குகிறார் வள்ளுவர். இந்தக் குறளில் உள்ள பகவன் என்ற சொல் இரண்டு விதங்களாக ஆராயப்படுகிறது.
பகவன் என்பது இறைவன் என்ற பொருளில் கொள்வது ஒரு வகை.
பகலன் என்பது படியெடுக்கையில் பகவன் என்றாகியிருக்கலாம் என்பது இன்னொரு வகை. பகலன் என்றால் கதிரவன். அப்படியும் இருக்க வாய்ப்புண்டு என்பதே என் கருத்து. ஆனாலும் வள்ளுவனார் இன்றில்லாததால் எப்பொருளிலும் எடுக்கலாம். இறைவனே மிகப் பெரியவன். தன்னைத் தான் தோன்றி தன்னில் உலகு தோன்றியான் என்பார்கள். அப்படிப் பார்த்தால் சூரியனிலிருந்து நாம் வெடித்து வந்தோம் என்றும் சொல்கின்றார்கள். எது உண்மையோ. ஆண்டவனன்றி யாரறிவார்.
நீங்கள் சொல்லியிருக்கும் கதையும் அற்புதம். மிகவும் ரசித்தேன்.
நன்றாயிருக்கிறது சிறில்
நன்றி ஜிரா.
//தமிழ்ச் சங்கத்தில் அன்று திருக்குறளை அரங்கேற்றும் பொறுப்பு வள்ளுவனுக்குக் கிடைத்தது. இன்று சிறிலுக்குக் கிடைத்திருக்கிறது. மிகச் சிறப்பு.//
ரெம்ப நன்றி.
//அப்படிப் பார்த்தால் சூரியனிலிருந்து நாம் வெடித்து வந்தோம் என்றும் சொல்கின்றார்கள்//
இதுவும் ஏற்புடையதாகவேதெரிகிறது. முதல் அதிகாரத்தின் மற்ற குறள்களையும் இந்தக் கருத்துக்குப் பொருத்த இயலுமா?
நிர்மல்,
பதிவை படித்தேன் அழகான விளக்கங்கள். நன்றி.
ஊக்கத்துக்கு நன்றி சிந்தாநதி.
நல்ல துவக்கம் சிறில். தொடரட்டும் உங்கள் பணி, வாழ்த்துக்கள்.
நல்ல கதை சிறில்.
தொடருங்கள்
//நல்ல துவக்கம் சிறில். தொடரட்டும் உங்கள் பணி, வாழ்த்துக்கள். //
நன்றி சிவா.
பதிவைப் பற்றிய சிறப்பான தகவல் ஒன்று.
தமிழ்ச் சங்கத்தின் 50வது பதிவு இது.
:)
சிறில்
நல்லாயிருக்குங்க..
தொடருங்கள்..
அந்த கடைசி வரியினால் மிரள வைத்துவிட்டீர்கள்!
நன்று நன்று.
//பகலன் என்பது படியெடுக்கையில் பகவன் என்றாகியிருக்கலாம் என்பது இன்னொரு வகை. பகலன் என்றால் கதிரவன். //
இது ஏற்க கூடியதாகவே உள்ளது. தமிழர்கள் இயற்கையை வழிபடுபவர்கள் ஆகையால், இது மிக பொருத்தமாகவே இருக்கிறது.
நன்றி.
நல்ல முயற்சி சிறில்.
வாழ்த்து(க்)கள்.
கதைன்னா கேக்க யாருக்குத்தான் பிடிக்காது?
அது யாருன்னு சொன்னீங்கன்னா வசதியாயிருக்கும். ஏன்னா சூரியன்லேர்ந்துதான் எல்லாம் வந்துச்சுன்னா சூரியன் எங்கேர்ந்து வந்துச்சுன்னு கேள்விவருமில்லையா. அதுமட்டுமில்லாமல், இந்த சூரியன்கள்(உங்களுக்கு தெரியாததில்லை - பன்மை) எதையாவது மையமாக வைச்சு சுத்திவருதான்னு ஆராய்ச்சி நடக்கிறதாக் கேள்வி.
அப்படியின்னா மத்த சூரியன்களும் நம்ம சூரியன்லேர்ந்துதான் வந்துச்சா, ஏன் கேக்கிறேன்னா இருக்கிற சூரியன்களிலேயே நம்முடையது தான் குறைவான பவர் உடையதுன்னு கேள்விப்படுகிறேன்(தவறுன்னா திருத்தலாம்.)
பிக் பேங்ஸ் என்று சொல்லப்படும் ஒன்று சூரியனிலிருந்து எல்லாம் பிறந்ததுன்னு சொல்லலை.
உங்களுக்கு கடவுள் இருக்கிறார்னு நம்பவும், வள்ளுவர் சொன்ன, சொல்ல நினைத்த அத்தனையும் உண்மை அப்படின்னு ப்ரூப் பண்ணவும் இது உதவலாம்(பகவன் பகலனா மாறினதை மட்டும் வைத்து சொல்லப்பட்டதல்ல). ஆனால் சரிவராதுங்கிறது என்னுடைய சிறு மூளையின் சிறு நினைப்பு.
அலெக்ஸ் தப்பா நினைச்சுக்கா மாட்டீங்கன்னா ஒரு கேள்வி, உங்களுடைய கதையும், வள்ளுவரின் குறளும் தனித்தனியா விளங்குது. ஆனா இந்தக் கதைக்கும் குறளுக்கும் என்ன சம்மந்தம்னு சொல்லுவீங்களா?
//சூரியனிலிருந்து நாம் வெடித்து வந்தோம் என்றும் சொல்கின்றார்கள். //
ராகவனுடைய இந்த விஷயம் கோட் செய்ய கடந்த பின்னூட்டத்தில் மறந்துவிட்டேன் அப்படியே இன்னுமொன்றையும், உங்களின் இந்த முயற்சி நன்றாக இருக்கிறது. கௌதம் ஏற்கனவே காமத்துப்பால் கதைகள் எழுதினதா ஞாபகம்.
நல்லா பண்ணுங்க, வாழ்த்துக்கள்.
//அலெக்ஸ் தப்பா நினைச்சுக்கா மாட்டீங்கன்னா ஒரு கேள்வி, உங்களுடைய கதையும், வள்ளுவரின் குறளும் தனித்தனியா விளங்குது. ஆனா இந்தக் கதைக்கும் குறளுக்கும் என்ன சம்மந்தம்னு சொல்லுவீங்களா? //
மோகந்தாஸ் நல்ல கேள்வி. தப்ப நினைக்க இதில் ஒன்றுமில்லை.
குறளுக்கும் கதைக்கும் வெளிப்படையா சம்பந்தமில்லை எனலாம்.
மதங்கள் இயற்கையை தொழுவதாகத்தான் தோன்றின என்றால்
'ஆதிபகவன் முதற்றே உலகு' என்பதும் இயற்கையைப் புகழும் கருத்தாக புரியப்படலாமில்லையா.
கடவுள் எனும் கருத்தாக்கம் எப்படி உருவாகியிருக்கும் எனும் கருத்தை முன்வைத்து கதை நிற்கிறது.
இந்தக் கதையை எழுதும்போது நானும் நினைத்தேன்.
சும்மா கடவுள நம்புங்க;வள்ளுவர் சொல்கிறார் என ஒரு கதை எழுதினா குறளோடு நேரடித் தொடர்பு வரலாம் ஆனா ஒரு பெரிய தாக்கம் இருக்குமான்னு தெரியல.
குறள்களை/இலக்கியத்தை படிப்பதில் சுவாரஸ்யத்தையும் சேர்ப்பதுவும் எங்கள் முயற்சியின் ஒரு கூறு.
உங்களுக்குத் தோன்றும் வழிமுறைகளையும் தயங்காமல் சொல்லுங்கள் செய்முறைப் படுத்த முனைவோம்.
பின்னூட்டத்துக்கு நன்றி.
//உங்களின் இந்த முயற்சி நன்றாக இருக்கிறது. கௌதம் ஏற்கனவே காமத்துப்பால் கதைகள் எழுதினதா ஞாபகம்.
நல்லா பண்ணுங்க, வாழ்த்துக்கள்//
நன்றி நன்றி. உங்கள் வழிகாட்டல்களை கேட்க காத்திருக்கிறோம்.
:)
நல்லமுயற்சி . திருக்குறள் பொது மறை. ஒவ்வொரு குறளுக்கும் பலகுரல் கொடுக்கலாம் ..
அகரமுதல என்ற ஆரம்பமே அருமை. வாழ்த்துகள் அலெக்ஸ்!
ஷைலஜா
நன்றி துளசியக்கா.
தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
கதை அருமை!முயற்சி தொடர எனது வாழ்த்துக்கள்!
ஷைலஜா நன்றி. நீங்க எப்ப ஐக்கியமாகப் போறீங்க?
:)
நன்றி துர்கா. தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
//அந்த கடைசி வரியினால் மிரள வைத்துவிட்டீர்கள்!
நன்று நன்று.//
நன்றி மாசிலா.
அருமை~!
நன்றி திருக்குமரன்.
நல்ல கதை சிறில். இந்தக் கதையில் ஒரே பெண் செய்ததாக நீங்கள் கூறுவதை நான் முற்கால மனிதர்களில் பல தலைமுறைகளாக செய்திருப்பார்கள் என்றே நினைக்கிறேன்.
உங்கள் கதையில் இதனை ஒரு ஆண் செய்ததாகச் சொல்லாமல் பெண் செய்ததாகச் சொல்வதிலும் வரலாற்று உண்மை இருக்கலாம் என்று நினைக்கிறேன். வயிறு வீங்கி உயிரை பிறப்பித்தப் பெண்ணைக் கண்டு தொடக்கத்தில் ஆண்கள் பயந்திருக்கலாம்; உயிர் கொடுக்கும் அவளைத் தெய்வமாகப் போற்றியிருக்கலாம் என்றே இன்றும் பெண் தெய்வ வழிபாட்டின் தொடக்கமாகக் கூறுகிறார்கள்.
நீங்கள் கிறிஸ்தவர் என்ற 'தற்செயலான' ஒரு காரணத்திற்காகவும் இது பிடித்திருக்கிறது. ஆண் கடவுளையே ஆபிரகாமிய மதங்கள் போற்றுகின்றன என்று சொல்லுவார்கள் (சரிதானா என்று தெரியாது). அந்த வகையில் முதல் தெய்வமாகப் பெண்ணை வைத்தது மிகச் சரி.
ஷைலஜா சொன்னது போல் ஒவ்வொரு குறளுக்கும் பல குரல்களைக் கொடுக்க முடியும். பகலன் என்ற பாடபேதத்தைப் பற்றி இதுவரை கண்டதும் இல்லை; கேட்டதும் இல்லை. இதுவே முதல் முறை. இப்படியும் ஒரு விளக்கம் இருக்கிறது என்று அறிந்து கொண்டேன்.
//நல்ல கதை சிறில். இந்தக் கதையில் ஒரே பெண் செய்ததாக நீங்கள் கூறுவதை நான் முற்கால மனிதர்களில் பல தலைமுறைகளாக செய்திருப்பார்கள் என்றே நினைக்கிறேன்.
//
நிச்சயமாய்.
//நீங்கள் கிறிஸ்தவர் என்ற 'தற்செயலான' ஒரு காரணத்திற்காகவும் இது பிடித்திருக்கிறது. ஆண் கடவுளையே ஆபிரகாமிய மதங்கள் போற்றுகின்றன என்று சொல்லுவார்கள் (சரிதானா என்று தெரியாது). அந்த வகையில் முதல் தெய்வமாகப் பெண்ணை வைத்தது மிகச் சரி. //
:)
யோசிக்கும்போது ஆண் எனத்தான் யோசிச்சேன். எழுதும்போது மாற்றிவிட்டேன்.
நல்ல முயற்சி, அதே சமயம், big task! வாழ்த்துக்கள்.
நல்ல ஆரம்பம் சிறில். உங்கள் விளக்கம் கண்ட பின் தான் எனக்கு குறளுக்கும் கதைக்கும் உள்ள தொடர்பு புரிந்தது.
இதே குறளை எடுத்துக் கொண்டு வெண்பா விதிகளை விளக்க முயன்ற என் பதிவுக்கு ஒரு சின்ன விளம்பரம். கோபம் கொள்ளாதீர்கள். :)
//நல்ல முயற்சி, // நன்றி சேதுக்கரசி
//அதே சமயம், big task!//
நிச்சயமா
// வாழ்த்துக்கள். //
நன்றி
இ. கொத்ஸ். நன்றி நன்றி.
இலவச விளம்பரம் எங்களுக்கும் தாங்க.
:)
//ஏன்னா சூரியன்லேர்ந்துதான் எல்லாம் வந்துச்சுன்னா சூரியன் எங்கேர்ந்து வந்துச்சுன்னு கேள்விவருமில்லையா?//
மோகன் தாசின் இந்தக்கேள்வி சிந்திக்கவைக்கிறது.
புரியாத விஷயத்தைக் குறிப்பிடும்போது,"அது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்" என்கிறோம். உண்மையும் அது தானோ?
அறியாமையை இருட்டுக்கும் அறிவை ஒளிக்கும் உவமையாக சொல்வதுண்டு. ஒளியில் ஒளியைத்தேடுவதைவிடவும் இருட்டில் அதைத் தேடுவதும் எளிதுதான்.
ஆதிபகவன் என்று மகா ஒளி பொருந்திய சூரியனைக் குறிப்பிட்டிருக்கவேண்டும். ஆதி பகவன் பகவான் அல்லது பகலவன் எதுவானாலும் சூரிய உதயத்தில் தான் உலகின் முதல் வேளை ஆரம்பிக்கிறது
ஆதித்யன் என்பதும் சூரியனின் பெயரே.
கடவுள் என்ற பெயரே கால்ங்காலமாய் சர்ச்சையில் உள்ள ஒன்று.
GOD IS NO WHERE
'W'என்ற எழுத்தை இடம் தள்ளிப் படித்தால் சிக்கல்வரும்.
'இல்லையென்று நீ சொன்ன சொல்லிலும் உளன். என்று பிரகலாதன் கூறிய வார்த்தைகள்
சொல் எனும் ஆதார சக்தியைவைத்து வாழ்க்கையெனும் சதுரங்க ஆட்டம் ஆடும் நிலையினைக் காட்டுகிறது.
"கடவுள் என்கிற சொல்லைபோல்
சர்ச்சைப் பொருள் எதுவுமில்லை
அதைபோன்று சாந்தியும் நிம்மதீயும்
தருகிற சொல்லுமில்லை"
ஷைலஜா
சிறில்,
நல்ல முயற்சி.
வாழ்த்துக்கள்.
/* பகலன் என்பது படியெடுக்கையில் பகவன் என்றாகியிருக்கலாம் என்பது இன்னொரு வகை. பகலன் என்றால் கதிரவன். அப்படியும் இருக்க வாய்ப்புண்டு என்பதே என் கருத்து.*/
ம்ம்ம்... புதிய தகவல். மிக்க நன்றி இராகவன்.
/* ஆனாலும் வள்ளுவனார் இன்றில்லாததால் எப்பொருளிலும் எடுக்கலாம். */
:))
பின்னூட்டத்துக்கு நன்றி ஷைலஜா. கருத்துக்களை பின்னர் விவாதிக்கலாம்.
:)
வெற்றி,
மிக்க நன்றி. இது ஒரு குழு முயற்சி. இன்னும் தொடருவோம்.
:)
என்களுக்கு நீங்கதான் வேணும் (வெற்றி)
நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்
Excellent Cyril
நன்றி Pranni.
Thanks LLDASU.
:)
Post a Comment