Feb 6, 2007

"நட்பாராய்தல்" குறள் 791

"இப்பல்லாம் முழு அதிகாரத்துக்கும் பொருள் வேணாமாம்; ஒவ்வொரு குறளுக்கும் ஒரு கதை சொல்லி விளக்கணுமாம்" என்றவாறு மயிலை மன்னாரை அணுகினேன்.

"ப்பூ! இம்புட்டுதானா? இதெல்லாம் நம்மளுக்கு ஜுஜுப்பீ! இப்ப நான் ஸொல்றதை எளுதிக்கோ! கதைக்காவ மண்டைய ஒடச்சு கற்பனை அல்லாம் பண்ண தேவையில்ல. அல்லாம் நம்ம புராணத்துலியே சொல்லியிருக்கு!மகாபாரதத்துல வர்ற கதை இது. எளுதிக்கோ" என்று தெனாவெட்டாகச் சொன்னான் மன்னார்!

இனி வருவது மன்னார் சொல்ல நான் பதிந்தது!


துர்வாசர்னு ஒரு முனிவரு இருந்தாரு.
அவரு ஒருநாளைக்கி திருதராஷ்ட்ரன் அரமணைக்கி வராரு.
அப்போ 'குந்தி'ன்னு ஒரு சின்ன பொண்ணு அவருக்கு பணிவிடை பண்ணினாங்க!
அத்தப் பாத்து முனிவருக்கு ரொம்பா சந்தோசமாயிருது.
'ஒனக்கு ஒரு மந்திரம் சொல்லித் தரேன். அத்தை யூஸ் பண்ணினேன்னா அதுக்கான தேவதை வந்து. அத்தோட சக்தியை ஒனக்கு கொடுக்கும்'னு சொல்லிட்டு பூட்டாரு.


இந்தப் பொண்ணு சும்மா இருக்கக் கூடாதா?
வெளயாட்டுத்தனமா அந்த மந்திரத்த சொல்லிப் பாக்கலாம்னு செஞ்சுப்புடுது!

ஒடனே சூரிய பகவான் வந்து, 'ஏம் பொண்ணே என்னைக் கூப்பிட்டே! சரி, இந்தா; என் சக்தியை எடுத்துக்கோ'ன்னு சொல்லி ஓரு சூரிய அம்சக் கொளந்தையை, கவசக் குண்டலத்தோட, கொடுத்திட்டு மறைஞ்சிடறாரு.

இந்தப் பொண்ணுக்கா கையும் ஓடலை; காலும் ஓடலை!
இது தெரிஞ்சா ரொம்ப அவமானமாயிடுமேன்னு ஒரு பொட்டியில அத்த வெச்சு தன்னோட ஒரு மாலையையும் போட்டு ஆத்துல வுட்டுட்டாங்க.
அந்தக் கொளந்தைய ஒரு தேரோட்டி பாத்து எடுத்து தன் குளந்தை மாரி வளக்கறாரு.

இந்தக் கொளந்தை, நல்லா வளந்து, வில்லுவித்தைல ஒரு பெரிய ஆளா வராரு.

இத்த சரியாக் கவனிச்ச துரியோதனன், அதாம்ப்பா, ராசாவோட புள்ள, ஒரு சரியான சமயத்துல தன்னோட ராச்சியத்துல ஒரு ஊரைக் கொடுத்து அவனையும் ஒரு ராசாவாக்கி, 'நீதாண்டா என்னோட நண்பன்'னு சொல்லிடறான்!
அல்லாரும் நம்மை கொறைச்சலா பேசினப்போ, இவன் நண்பன்னு சொல்லிட்டானேன்னு, கொஞ்சம் கூட யோசிக்காம இவரும் அவன் கால்லுல வுளுந்திடறாரு.

அவ்ளோதான்!
இந்தாளு அதுக்காவ இன்னால்லாம் பண்றாரு தெரியுமா?
அவன் கெட்டவன்னு தெரிஞ்சாலும், அவனை வுட்டு பிரியாம கூடவே இருக்காரு.
ஒரு நேரத்துல தன்னோட தாயே வந்து 'நீதாண்டா என் புள்ள!'ன்னு கதற்ராங்க.
அப்பக் கூட அசையலியே!
'சர்த்தான் போம்மா! போயி, ஒன் புள்ள அர்ச்சுனனை ஒயுங்கா உசிரைக் காப்பாத்திக்கச் சொல்லு! ஏன்னா, என் நண்பனுக்காவ நான் அவன் தலைய வாங்கக் கூட தயங்க மாட்டேன்'னு கண்டிசனா சொல்லிடறாரு.
கடைசீல அந்த அர்ச்சுனன் கையிலியே உசிரையும் வுடறாரு.

இவரை நெனைச்சுதான் நம்ம ஐயன் இந்தக் குறளையே எளுதினாரோன்னு கூட எனக்கு டவுட்டு உண்டு!
அது இன்னான்னு கேக்குறியா!

இதான் அது1
'நட்பாராய்தல்' அப்பிடீங்கற அதிகாரத்துல மொதக் குறளா வெச்சிருக்காரு!
791ஆவது குறள் இது!
கேட்டுக்கோ!

"நட்பாராய்தல்"

நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்
வீடில்லை நட்பாள் பவர்க்கு. [791]

இப்ப, நீ ஒருத்தராண்ட தோஸ்தாவறதுக்கு முன்னாடியே, இவன் யாரு, இந்த ஆளோட நட்பு வெச்சுக்கறது நமக்குத் தேவைதானான்னு யோசிச்சு முடிவு பண்ணணும். ஏன்னா, அப்படி ஆயிட்டேன்னு வெச்சுக்கோ; அதுக்கு அப்பால, நீ இன்னா பண்ணினாலும் ஒன்னால உடவே முடியாது.கால சுத்தின பாம்பு மாதிரி அது சுத்திக்கினே இருக்கும். ஒன்னியக் காவு வாங்காம வுடாது.

'சரி, சரி, வா! நா ஒங்கிட்ட அப்பிடி ஒண்ணும் கேக்க மாட்டேன்! நம்ம நாயராண்டை ஒரு டீ, வடை சாப்ட்டுட்டு போயி ஒன் பதிவ எளுது' எனச் சிரித்தபடி தோளில் கை போட்டான் மயிலை மன்னார்!


14 ஊக்கங்கள்:

said...

Good job Sk.Story telling makes reading kural pathivu's more interesting

said...

test

said...

எனக்கு "புரிஞ்சிடுத்து"!!
மயிலை மன்னாரே தெலிவா & சுளுவா சொல்கிறபா.
இந்தா ஒரு பீடி.

said...

//இப்ப, நீ ஒருத்தராண்ட தோஸ்தாவறதுக்கு முன்னாடியே, இவன் யாரு, இந்த ஆளோட நட்பு வெச்சுக்கறது நமக்குத் தேவைதானான்னு யோசிச்சு முடிவு பண்ணணும். ஏன்னா, அப்படி ஆயிட்டேன்னு வெச்சுக்கோ; அதுக்கு அப்பால, நீ இன்னா பண்ணினாலும் ஒன்னால உடவே முடியாது.கால சுத்தின பாம்பு மாதிரி அது சுத்திக்கினே இருக்கும். ஒன்னியக் காவு வாங்காம வுடாது.
//

எஸ்கே ஐயா,

நம்பிக்கையில் கெட்டவர் பலருண்டு நட்பால் கெட்டவர் சிலரே.
:))))))))))

said...

அதென்ன ஒரே ஒரு பீடி?
ஓ! இப்ப அவ்ளோதான் கைவசம் இருக்கு போல!
அடுத்த தபா ஒரு கட்டோட வந்து பாருங்க குமார்த்தம்பி!

:)

said...

//நம்பிக்கையில் கெட்டவர் பலருண்டு நட்பால் கெட்டவர் சிலரே.//


இது நம்பிக்கையைப் பற்றிய குறள் அல்ல கோவியாரே!

அது போலக் நட்பால் கெட்ட 'சிலரில்' ஒருவனைப் பற்றியே சொல்ல முனைந்தேன்!
நன்றி.

said...

நட்பாராய்தல்..

குறள்களில் சிலவற்றுக்கு இன்றைய சூழலில் நேரடி பொருத்தம் கிடைப்பதரிது. கொஞ்சம் பொருத்திப் பார்க்கவேண்டியிருக்கும்.

ஆனால் நட்பாராய்தல்போல பல அதிகாரங்களில் உள்ள குறள்கள் காலத்தினால் அழியாத பொது உண்மைகள். எக்காலத்திலும் பொருத்திக்கொள்ளலாம்.

அருமையாக பாரதக்கதையை எடுத்தாண்டது நல்ல யுக்தி.

தொடருங்க மயிலை மன்னார்.

said...

எஸ்.கே சார்,நட்பாராய்தல் அதிகாரத்தில் வரும் முதல் குறள் இது. அனைவரும் மனதில வைக்க வேண்டிய குறள்.

சிறப்பாக விளக்கத்துடன் கூறியுள்ளீர்கள்

Dr.G.U.Pope அவர்கள் தனது ஆங்கில உரையில் ஒற்றை
வரியில் இப்படிச் சிறப்பாக மொழி பெயர்த்துள்ளார்.அதைத் தங்கள் பார்வைக்காகக் கீழே கொடுததுள்ளேன்

"There is no evil so great as contracting a friendship without due enquiry"

அன்புடன்
SP.VR.சுப்பையா

said...

//'நீதாண்டா என் புள்ள!'ன்னு கதற்ராங்க.
அப்பக் கூட அசையலியே!
'சர்த்தான் போம்மா! போயி, ஒன் புள்ள அர்ச்சுனனை ஒயுங்கா உசிரைக் காப்பாத்திக்கச் சொல்லு! ஏன்னா, என் நண்பனுக்காவ நான் அவன் தலைய வாங்கக் கூட தயங்க மாட்டேன்'னு கண்டிசனா சொல்லிடறாரு.
கடைசீல அந்த அர்ச்சுனன் கையிலியே உசிரையும் வுடறாரு.//

அந்தப்பக்கம் டாக்டரா லப்டப் ல மருத்துவமொழில அசத்தறீங்க..இங்க இப்படி ! எப்படி எஸ்கே முடிகிறது? அமக்களம் போங்க!
ஷைலஜா

said...

உற்சாகப் படுத்திப் பாராட்டியதற்கு நன்றி, சிறில்!

said...

போப் அவர்களின் ஆங்கில விளக்கத்தையும் தந்தமைக்கு மிக்க நன்றி ஆசானே.

இது போலவே அடுத்து இங்கு வரும் குறள்களுக்கும் அளிப்பீர்கள் என நம்புகிறோம்!

இதான்,...... வந்தீங்கன்னா, உங்களுக்கும் எதனாச்சும் வேலை கொடுத்திருவோம்ல!
:))

said...

மனந்திறந்த மகிழ்ச்சியான பாராட்டுகளுக்கு மிக்க நன்றி, ஷைலஜா!

said...

//ஜுஜுப்பீ! இப்ப நான் ஸொல்றதை எளுதிக்கோ!//

ஏங்க சொல்றது எப்படி ஸொல்றது ஆச்சு? என்ன தான் பேச்சு நடைல கதை சொன்னாலும் இப்படியா? :(

Anonymous said...

Hi,

We have just added your blog link to Tamil Blogs Directory - www.valaipookkal.com. Please check your blog post link here

Please register yourself on the Tamil Blog Directory to update your new blog posts and bring before your work to the large base of Tamil readers worldwide.

Thanks

Valaipookkal Team