Dec 19, 2006

அவ்வையும் அப்துலும்

கோவை வந்து உலகத்தமிழ் இலக்கியக் கருத்தரங்கை துவக்கிவைத்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தனது உரையில் ஔவையின் கீழ்கண்ட பாடலை மேற்கோளிட்டிருக்கிறார்.

அரிது அரிது மனிடராதல் அரிது
அதனினும் அரிது, கூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறத்தல்
கூன் குருடு செவிடு பேடு நீங்கிப் பிறந்தாலும்
ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது
ஞானமும் கல்வியும் நயத்த காலையும்
தானமும் தவமும் தான் செய்தல் அரிது
தானமும் தவமும்தான் செய்த காலையில்
வானகம் திறந்து வழிவிடுமே!

மேலும் பாரதியின் அறிவியல், மெய்யியல் பாடல் வரிகள் கீழ்கண்டவாறு.

இடையின்றி அணுக்களெலாஞ் சுழலுமென
இயல் நூலார் இசைத்தல் கேட்டோம்
இடையின்றி கதிர்களெலாஞ் சுழலுமென
வானூலார் இயம்புகின்றார்
இடையின்றித் தொழில் புரிதல் உலகினிடைப்
பொருட்கெல்லாம் இயற்கை யாயின்
இடையின்றிக் கலைமகளே நினதருளில்
எனதுள்ளம் இயங்கொணாதோ?

மேலும் அவர், "தமிழ் ஒரு பிரதேச மொழி மட்டுமில்லை; மனித சமுதாயத்தை சிறப்புடன் மகிழ வைக்கும் அறிவுக் களஞ்சியம்" என்றிருக்கிறார்.

நன்றி: தினமலர்

4 ஊக்கங்கள்:

said...

அருமையான பாடல்கள் சிறில். இரண்டு பாடல்களிலும் உள்ள கருத்துச் செறிவைப் பாருங்கள்.

முதல் பாடலில் ஔவை குறிப்பிட்ட ஒன்று குறைந்தாலும் வாழ்வு மாறிப் போய் விடுவதைக் கவனியுங்கள். அப்பப்பா...அத்தனை ஆண்டுகளுக்கு முன்னால் ஆண்டவனுக்கு முன்னால் ஒரு கிழவி துணிந்து இதைச் சொல்லியிருக்கிறாள் என்றால்..அவள் வாழ்க்கையை எவ்வளவு நுணுக்கமாக அனுபவித்திருக்க வேண்டும். அடடா!

said...

பல பழைய பொக்கிஷங்கள் கலாம் அவர்களின் தெய்வீக கரங்களில் புத்தெழுச்சியும் பெரும் வலிமையும் பெறுகின்றன. அவற்றினுள் இதுவும் ஒன்று. கலாமை பார்க்கும் போதெல்லாம் மனதில் எழும் வரிகள்,
தெய்வ சாபம் நீங்கவே நங்கள் சீர் தேசமீது தோன்றினை வா வா வா. அவர் காலத்தில் வாழ நாம் புண்ணியம் செய்திருக்க வேணும். நம் குழந்தைகள் வாழும் சமுதாயமாவது அவரது இலட்சிய கனவு நிறைவேறிய சமுதாயமாக இருக்க வேணும். நன்றி சிறில்.

said...

எனக்கு படிச்சதும் பிடிச்சுது பதிச்சிட்டேன்.

:)

//அவள் வாழ்க்கையை எவ்வளவு நுணுக்கமாக அனுபவித்திருக்க வேண்டும்//

உண்மை.

said...

நன்றி நீலகண்டன். ம்ம் எதிர்காலமாவது அவர் கனவு காண்பதுபோல அமையட்டும்.