கவிதை-34 படிக்க
//இன்னும் இன்னும் வல்லது வாழ்வதற்காய்புத்தம் புது புனர்ஜென்மமேகஇன்னும் இருக்கிறது ஆகாயம்//
ஆரம்பத்தில் மழை, சூறாவளி,சுனாமி என்று நீரைச் சுற்றியே போகும் கவிதை, மெல்ல மற்ற இயற்கை, செயற்கை அபாயங்களையும் தொட்டு, வல்லவன் வாழ்வான் என்னும் சித்தாந்தத்தைச் சொல்ல முயல்கிறது. வழக்கமான சொற்களாலும் வசனங்கள் போன்ற நடையாலும் கவிதையின் பாணியில் நச் தன்மை குறைகிறது. வல்லது வாழ்வது நல்லதா, அல்லதா என்று எதை நிறுவ முயல்கிறார் கவிஞர் என்று புரியாமலும் போகிறது..
நன்றி-விமர்சனம்-பாலபாரதி
கவிதை 33 படிக்க
//முன்பும் இருந்தது ஆகாயம்இன்னும் இருக்கிறது ஆகாயம்இனியும் இருக்கும் ஆகாயம் //
மூன்றே வரிகளில் நல்ல கவிதை..
இனியும் இருக்கும் ஆகாயம் என்னும் நம்பிக்கை கவிதை.
நன்றி-விமர்சனம்-பாலபாரதி
கவிதை-32 படிக்க
//அடிக் கண்மணி உன் பார்வையின் எல்லைக்கும் அப்பால்,பரந்து விரிந்து இன்னும் இருக்கிறது ஆகாயம்" //
தாய்-மகள் உறவைப் பற்றிய அருமையான கவிதை..மகளே உலகமாய் வாழும் தாய்..தாயே உலகமாய் நினைக்கும் மகள்..இன்னும் இருக்கிறது வானம் என்கிறாள் தாய்..உலகத்தை மகளுக்கு உணர்த்தி..
நன்றி-விமர்சனம்-பாலபாரதி
கவிதை-31 படிக்க// மனம் கவர்ந்த மங்கையரைக் கண்ட மனிதனின் காதலை விவரிக்க வார்த்தையேது பலவாயிரம் உயிர் அணுக்களுடன் ஓட்டப் பந்தயத்தில் வென்றது அவளைக் காணவே //
காதலை இன்னுமொரு விதமாகச் சொல்கிறது இந்தக் கவிதை..முதல் காதல் அழியாதது..மனதை விட்டு விலகாதது..தோல்வியடைந்த முதல் காதலைப் பற்றிய நினைவுகள்..
நன்றி-விமர்சனம்-பாலபாரதி
கவிதை-30 படிக்க// இன்னும் இருக்கிறது ஆகாயம் அவர்தம் வீட்டுக் கூரையாக //
நச் கவிதை.. உலகுக்கெல்லாம் ஒரே துப்பட்டியான ஆகாயத்தை வீடிழந்து துன்பப் படும் நபர்களின் வாழ்க்கையுடன் ஒட்டிக் காட்டுகிறார் கவிஞர்
நன்றி-விமர்சனம்-பாலபாரதிஇதோ இந்தக் கவிதையில் பிச்சைக்காரி - வறியவர்கள் - நம்பிக்கை இழந்து பயணப்படுவோர்க்கெல்லாம் ஒரே ஆறுதலாக ஆகாயம் பரந்து விரிந்து காட்சியளிக்கிறது என்று எழுதியிருக்கின்றார் கவிஞர். இன்னும் இருக்கிறது ஆகாயம் என்ற வரியோடு முடித்திருக்கலாம் ஆனால் அவர்தம் வீட்டுக் கூரையாக என்று நீட்டியிருக்கவேண்டாம். கவிஞர் இன்னும் கொஞ்சம் வார்த்தைகளையும் கருத்துக்களையும் மெருகேற்றியிருக்கலாம்.
நன்றி-விமர்சனம்-நிலவு நண்பன்
1 ஊக்கங்கள்:
நல்ல விமர்சனம்
Post a Comment