Sep 18, 2006

இன்னும் இருக்கிறது ஆகாயம்-அறிவிப்பு


முதலில் நன்றி உரை!
இப்படி ஒரு கவிதைப்போட்டியை நடத்துங்க என்று உறசாகப்படுத்திய GG அவர்களுக்கும்,

தலைப்புக்காக இரண்டு நாள் காத்துக்கொண்டிருக்கையில் அநாயசமாக ஒரு நொடியில் "இன்னும் இருக்கிறது ஆகாயம்" என்ற தலைப்பை கொடுத்த "தேனி" கண்ணனுக்கும்,

முதல் கட்ட தீர்ப்புகளை வழங்கிய "இன்ஜினியர்" பாலபாரதிக்கும்(ஒவ்வொரு கவிதைக்கும் ஒரு விமர்சனம் தந்தவருக்கு சங்கம் சிரம் தாழ்த்தி நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கிறது. நாளை அந்த விமர்சனங்களை ஒரு பதிவாகவே வெளியிடுகிறோம்), முத்துக்கள் மாதிரி ஒவ்வொரு கவிதைக்கும் ஒரு மதிப்பெண் அளித்து தரம் பிரித்து தந்த "நிலவு நண்பன்" ரசிகவ் ஞானி, அவர்களுக்கும் நன்றி! நன்றி!

கடைசியாக போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கு நன்றி! சங்கம் கேட்டுக் கொண்டதற்கிணங்க இவ்வளவு நாள் தங்கள் வலைப்பதிவுகளில் கவிதைகளை வெளியிடாமல் நாகரிகம் காத்ததற்கு மேலும் ஒரு நன்றி!

பரிசுகளுடனும், தீர்ப்புடனும் உங்களை மீண்டும் சந்திக்கிறோம். அதுவரை உங்கள் கவிதைகளை பதிவுகளில் இட்டு இந்தப்போட்டியினை மேலும் சிறப்பளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்!

தாமாகவே முன் வந்து எங்களுக்கு உதவிய முத்தமிழாருக்கும்(மஞ்சூர் ராஜா) ராசுக்குட்டிக்கும் எங்கள் நன்றிகள் பல.

11 ஊக்கங்கள்:

said...

சிறிய மாற்றத்துடன் பதிவு மாற்றியமைக்கப்பட்டுள்ளது

said...

//முதல் கட்ட தீர்ப்புகளை வழங்கிய "இன்ஜினியர்" பாலபாரதிக்கும்//
அடப்பாவிகளா....
நீங்களும் பா.க.ச ஆளா...
ம்ஹூம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்... :-((((((

said...

நன்றி இளா, மேலும் அனைத்து தமிழ்ச் சங்க நிர்வாகிகளுக்கும்! பல்வேறு வேலைப்பளுக்கிடையிலும் சங்கத்தை பராமரிப்பது கடினமே எனினும் நிகழ்த்திக் காட்டியதற்கு பாராட்டுக்கள்!

அப்படியே அடுத்த மாத தலைப்பையும் கொடுத்து விடுங்கள்... காத்திருக்கிறோம், முக்கியமாக விமர்சனப்பதிவை எதிர்நோக்க ஆரம்பித்து விட்டோம் இப்போதே!

said...

இளாவுக்கும் சங்க உறுப்பினர்களுக்கும் போட்டியாளர்களுக்கும் வாழ்த்துக்கள். வெற்றி பெறப்போகிறவர்களுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

said...

பாலா அது என்ன பா.க.ச?

said...

ராசுக்குட்டி உங்க மேலான ஆதரவு தான் எங்களுக்கு ஊக்கம் அளிக்கும் மாமருந்து. தொடரும் உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் சங்கத்து நிர்வாகிகள் அனைவரது சார்பாகவும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

said...

போட்டியின் நடப்புக்குப் பெரிது உதவிய வலையூலகக் கலக்கல் திலகம் கௌதம் சாருக்கு நாங்க சிறப்பான் நன்றியை சிறப்பாச் சொல்லணும்... ஆமா ஒரு போட்டி நடத்தவே நாங்க இவ்வளவு பாடு படும் போது ரொம்பவும் யதார்த்தமா அழ்கா நச்சுன்னு அதிரடியாப் போட்டிகள் நடத்திப் பட்டையக் கிளப்புறீங்களே எப்படி சார்?

said...

எப்பங்க முடிவச் சொல்லுவீங்க? அதுவரைக்கும் ஆகாயம் இருக்குமா?

போட்டி முடிவுக்காய்
இன்னும் இருக்குது ஆகாயாம்.

said...

வாய்ப்பளித்த தமிழ்ச் சங்கத்திற்கு நன்றிகள் பல!

said...

போட்டிக்கு உற்சாகப்படுத்திய உதவிய அனைவருக்கும் நன்றி. இது மாதிரியான போட்டிகள் அடிக்கடி நடத்த வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

said...

இளா, பாலபாரதி, நிலவுநண்பன் தமிழ்ச்சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி

போட்டியில் பங்கு பெற்றவர்களுக்கும்
வாழ்த்துகள்

இன்று பதிவிலிட்டுவிட்டேன்