Sep 1, 2006

சங்கம்- கவிதைப் போட்டி(1)-கவிதை- 34

மழை
பாதையோர படுக்கையறையில் பச்சிளம் குழந்தையுடன்
குளிரில் குடியிருக்கும் குடும்பம்

சூறாவளி
சுற்றி வீசும் காற்று
சுழண்டு வீழும் உயிர்கள்
சுழற்றியடிக்கும் கட்டிடங்களையும்

சுனாமி
மாண்டவர்களும் மீண்டவர்களும்
மீண்டும் வாழ மறுபடியும் மீண்ட உயிர்கள்

குண்டு வெடிப்பு போரபாயம்
குமுறும் பெருநெருப்பு பூகம்பம்
வீழ்ந்தாலும் வாழ வைக்கும் உயிர் நம்பிக்கை

வாழும் வேட்கையில்

வீம்பாய் தலை தூக்கும் புல் பூண்டு
விழாது அசையும் நாணல்
நிலம் வாரா சாதகப்புள்
நிஜம் இவையே


இன்னும் இன்னும் வல்லது வாழ்வதற்காய்
புத்தம் புது புனர்ஜென்மமேக
இன்னும் இருக்கிறது ஆகாயம்

#போட்டியாளர் சார்பாக பதிவிட்டது இளா...

1 ஊக்கங்கள்:

said...

தன் நம்பிக்கை இருந்தால் வாழ்ந்து காட்டலாம் என்று எடுத்து உரைக்கும் விதமாக உள்ளது.
வாழ்த்துக்கள்