Aug 29, 2006

சங்கம்- கவிதைப் போட்டி(1)-கவிதை- 11

இழப்பின் வேதனைகளுக்கு
மரிப்பதா தீர்வு?

சூரியன் சுட்டெரித்தாலும்
உடல் கிழித்து மின்னல்கள்
வெளிவந்தாலும்

நட்சத்திர அணிகலன்கள்
உதிர்ந்தாலும்

இடிகள் மிரட்டினாலும்

அவ்வப்போது
மழையாய் அழுதாலும்

வீழ்வதைப் பற்றி
சிந்திக்காமல்

இன்னும் இருக்கிறது பார்
ஆகாயம்.

#போட்டியாளர் சார்பாக பதிவிட்டது இளா...

1 ஊக்கங்கள்:

said...

"நச்"ன்னு இருக்கு கவிதை...
இவ்ளோ சிக்கனமான வார்த்தைகளில் கச்சிதமாக சொல்லியிருக்கிறீர்கள் கருத்துக்களை!