மரணத்தின் வாசலுக்கு துணைக்கழைப்பது தெரியாமல்
குழந்தையின் கைப்பற்றி செல்லும் தாய்
கண்களில் கனவோடும் கைகளில் வாழ்க்கையோடும்
பள்ளிக்கு செல்லும் பிள்ளைகள்
காத்திருக்கும் குடும்பத்தின் கவலை தீர்க்க
பணிக்கு செல்லும் தலைவன்
நழுவும் நிமிடங்களை பிடித்திழுத்து
நிரந்தரமாக்க துடிக்கும் அன்பு காதலர்கள்
கண்மூடி திறக்கும் முன்
கனவுகள் சிதறின ரத்த துளிகளாய்
காலங்கள் மாறினாலும்
தேசங்கள் மாறினாலும்
யுகங்கள் தாண்டி மீண்டும் மீண்டும் அந்த நிகழ்வு அரங்கேற
ஒரே மெளன சாட்சியாய்
இன்னும் இருக்கிறது ஆகாயம்,
என்றாவது யுத்தம் மறைந்து
மனிதம் தலைதூக்கும் என்ற நம்பிக்கையில்.
#போட்டியாளர் சார்பாக பதிவிட்டது இளா...
Aug 22, 2006
சங்கம்- கவிதைப் போட்டி(1)-கவிதை-5
செதுக்கியவர் ILA (a) இளா at Tuesday, August 22, 2006
Subscribe to:
Post Comments (Atom)
3 ஊக்கங்கள்:
இன்றைய கால கட்டத்திற்கு மிக பொருத்தமான கவிதை.
நல்லா இருக்கு.
யுத்தங்கள் மறைந்து மனிதம் தலை தூக்க வேண்டும்.
அருமையான கவிதை
எழுதியவருக்கு நன்றி
ரொம்ப நல்ல வரிகள்! எழுதிய உங்களுக்கு வெற்றி பெற வாழ்த்துக்கள்!
Post a Comment