உலகின் எல்லா மூலைகளிலும் பொதுவுடமை
மலிவாய் சுலபமாய் எடுக்கப் படுகிறது
மனிதவுயிர் சகஜமுமாகி விட்டது இந்நிகழ்வுகள்
இலங்கை பாலஸ்தீனம் லெபனான் மும்பை
இன்னும் இருக்கிறது ஆகாயம்.
இறை தேடினான் மனிதன் அன்று
தெளிந்துணர்ந்த சிலரால் தானும் உணர்ந்தாய்
தனியார் மயமாக்கி இறையின் பெயரால்
இரை ஆகிறான் மனிதன் இன்று
இன்னும் இருக்கிறது ஆகாயம்.
இறக்கின்றனர் பாலகர் பசியால் விவசாயி
வறுமையால் ஒருவேளை உணவுண்டு வாழ்கிறது
பெரும்பான்மை கோடி குவிக்கிறார்கள் அரிதாரிகள்
அவர்களுக்கே உயிர் என்கிறார்கள் மூளையில்லாதவர்கள்
இன்னும் இருக்கிறது ஆகாயம்.
துவேஷங்களைப் பரப்பிகிறார் மனிதர்கள் பலர்
துவேஷங்களால் இறக்கிறார் பச்சிளம் பாலகர்
கண்டித்தால் அன்பைப் பாராட்டினால் கோபம்
குறையென்றால் கண்டிக்கிறது பெருங்கூட்டம் தமிழ்மணத்தில்
இன்னும் இருக்கிறது ஆகாயம்.
ஏ ஆகாயமே
மனிதனின் செயல்களால் கண்ணீர்தான் வடிப்பாயா?
விண்கல்லால் டைனோசர் இனமழித்தது போல்
என்றழிக்கப் போகிறாய் கேடுகெட்ட மனிதரை
#போட்டியாளர் சார்பாக பதிவிட்டது இளா
Aug 17, 2006
சங்கம்- கவிதைப் போட்டி(1)-கவிதை-2
செதுக்கியவர் ILA (a) இளா at Thursday, August 17, 2006
Subscribe to:
Post Comments (Atom)
3 ஊக்கங்கள்:
/./
குறையென்றால் கண்டிக்கிறது பெருங்கூட்டம் தமிழ்மணத்தில்.
/./
உண்மைதான்
நான்
சில நேரங்களில்
பிளாக்கை விட்டே
சென்று விட நினைத்ததுன்டு..
வெறி பிடித்து அலைகிறது
சில அயல் கிரகவாசிகள்
அவர்களை களையெடுக்க
தமிழ்மணம் முயற்சி செய்ய வேண்டும்.
இப்போதெல்லாம் தமிழ்மணத்தை திறப்பதெற்கே யோசிக்கிறேன்.
நன்றி
மின்னுது மின்னல் said...
//உண்மைதான்
நான்
சில நேரங்களில்
பிளாக்கை விட்டே
சென்று விட நினைத்ததுன்டு..//
மின்னல் உங்களுக்கு ஒன்று தெரியுமா நான் பிளாக்கருக்கு வந்ததும் எழுதிய முதல் பதிவே ஜாதி, மத அயல் கிரக வாசிகளைப் பற்றிய கோபமான பதிவுதான், ஆனால் அதை வெளியிடவில்லை பின்பு அதை நான் நீக்கி விட்டேன்!
(வெளியிட்டிருந்தாலும் அது நிச்சயம் பெரிய தாக்கத்த ஏற்படுத்தி இருக்காது)
தமிழ்மணத்தைப் படிக்கும் அதிக்கபடியான "நல்ல" பல தமிழ் மனங்களுக்கும் இது வருத்தம் தான், ஆனால் இப்பொழுதெல்லம் நான் "அந்த" மாதியான பக்கங்களுக்கு செல்வதில்லை! தூர விலகிவிடுவேன்!
இதற்க்காக முற்றிலுமாக சென்றுவிட நினைத்தேன் என்று சொல்லுவது தவறு! தாங்களும் அந்த மாதிரி பக்கங்களில் இருந்து உங்களை விலக்கிக் கொள்ளுங்கள்!
அன்புடன்...
சரவணன்.
சரா
உங்கள்
கருத்துக்கு
நன்றி..
Post a Comment